கொழும்பு நகரில் காணப்படும் சனசமூக நிலையங்களுக்கு பதிலாக பாரிய அளவிலான சேவை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சேவை மத்திய நிலையங்களின் ஊடாக சிரேஷ்ட பிரஜைகள், மாற்றுத் திறனாளிகள், சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு அவசியமான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாக மாநகர மேயர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ சிகிச்சைப் பிரிவு, உடற்பயிற்சிப் பிரிவு, வாசிகசாலை, வைபவ மண்டபம் உட்பட சகல வசதிகளும் இதில் அடங்கும்.

இந்த சேவை மத்திய நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

கொழும்பு நகரில் இவ்வாறான 15 சேவை நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

இதன் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சேவை நிலையம் இன்று பிற்பகல் மோதர பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்வார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here