அம்பாரையில் யானையின் தாக்குதலில் பலியான தந்தையின் சடலத்தை வணங்கி இன்று காலை புலமை பரீட்சை எழுத சென்ற சோக சம்பவம்!

#நேற்று முன்தினம் அம்பாரை தமண பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரை யானை தாக்கி கொலை செய்தது.

இன்று காலை புலமைப்பரீட்சை எழுத இறந்தவரின் மகளான சிறுமி பாடசாலையிலும் வகுப்பிலும் மிகவும் திறமையான மாணவி இறந்த சோகத்தில் பரீட்சை நிலையம் எழுத செல்லாமல் இருந்தது அவ்மாணவியின் ஆசிரியைகள் அறிந்து மாணவியின் வீட்டீற்கு சென்று ஆறுதல் கூறி மாணவியை பரீட்சை எழுத கூட்டிச்செல்ல முற்பட்ட போது அச்சிறுமி தந்தையின் சடலத்தை காலை விட்டு அகழாமல் அழுதது அப்படியிருந்தும் மாதா, பிதாவுக்கு அடுத்தது குரு என்பதை அவ் ஆசிரியைகள் அச்சிறுமிக்கு நம்பிக்கை புத்துணர்ச்சி கொடுத்து வீட்டிலிருந்து பரீட்சை நிலையம் கூட்டிச்சென்று ஆசிரியர் தொழில் என்பது வகுப்பறை கற்றலோடு மாத்திரம் நிறுத்தாமல் ஒவ்வொரு மாணவருக்கு தாய் தந்தை போன்று இடருற்ற காலத்தில் மனவெழுச்சிகளை கட்டுப்படுத்துதல் உதவுதல் தமது கடமைகளுக்கு அப்பாற்பட்ட தார்மீக பொறுப்பு என்பதை நிறுபித்தார்கள்.

இம் மாணவியே இவ் குடும்பத்தில் மூத்த பிள்ளை அப்பிள்ளையோடு இரு சகோதரிகள் வசதி குறைந்த ஏழ்மையான இக்குடும்ப உறுப்பினர்களாவர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here