க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட சிசுசெரிய பஸ் சேவையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் முடிவடையும் வரை இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக  இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இந்த பஸ் சேவை குறித்து முறைப்பாடுகள் இருப்பின் 011 7 555 555 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை மேலும் கூறியுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளைய (05) தினம் இடம்பெறவுள்ளதுடன் மறுதினம் 06 ஆம் திகதி உயர் தரப் பரீட்சை ஆரம்பமாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here