யாழ். மாவட்டம், கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீட கட்டிடத் தொகுதிகளை  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) உத்தியோகபூர்வமாக  திறந்து வைத்துள்ளார்.

சுமார் இரண்டாயிரத்து நூறு மில்லியன் ரூபா செலவில் பொறியில் பீடத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட பத்து கட்டடங்களையும், உத்தியோகஸ்தர் விடுதி மற்றும் ஆண் பெண் மாணவர்களுக்கான விடுதித் தொகுதிகள், விரிவுரையாளர்களுக்கான அலுவலகம் என்பனவும் இதில் அடங்குகின்றன.

இந்நிகழ்வில், உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சித்தார்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், விசேட அதிதகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here