அரசியல் தேவைகளுக்காக மதக் கோட்பாடுகளை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ  தெரிவித்துள்ளார்.

“சசுனட அருண” வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை உதயபுர சிரி சாம விகாரையில் ஸ்தூபத்தை கட்டுவதற்காக அடிக்கல் நட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

பௌத்த சாசனத்தை அழிப்பதாக அரசாங்கத்துக்கு எதிராக குற்றம் சுமத்தும் தரப்பினர் ஒரு சந்தர்ப்பத்திலாவது தமது சொந்த செலவில் பௌத்த மதத்திற்காக ஏதாவது செய்திருக்கின்றார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here