பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு கூட்டு எதிர்க் கட்சியின் இரு எம்.பி.க்களது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தினேஷ் குணவர்தன மற்றும் குமார வெல்கம ஆகியோரின் பெயர்களே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன. தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்க கூட்டு எதிர்க் கட்சியில் 8 பேர் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சிப் பதவிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தீர்மானத்தை நாளை மறுதினம் திங்கட்கிழமை சபாநாயகரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

தற்பொழுது எதிர்க் கட்சித் தலைமைப் பதவியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எம்.பி. காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here