கடந்த 7 மாத காலப்பகுதிக்குள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில், 2,080 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ​ஹெரோய்ன் போதைப் பொருளானது, 173 கிலோகிராமுக்கும் அதிகமானளவு கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொக்கேய்ன் 14 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 11 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், கஞ்சா மற்றும் கேரள கஞ்சாவானது 3,000 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான போதைப் பொருள் சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதுபோலவே வட மாகாணத்திலும் அதிகளவில் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகப் பொலிஸ் போதைப் பொருள் ஒ​ழிப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here