யாழ்ப்பாணத்திலுள்ள ஆவா கும்பலுக்கு ஆதரவு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் வியாபாரியொருவர் நேற்றிரவு (28) “ ஐ கும்பலினால்” வெட்டிக் குத்திக் காயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கைத்தடி வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த வியாபாரி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கைத்தடி வடக்கு பிரதேசத்திலுள்ள நான்கு வியாபாரிகள் நேற்றிரவு தமது வியாபார நிறுவனங்களை மூடிவிட்டு வீடு செல்ல தயாராகிக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத எட்டுப் பேர் குறித்த வியாபாரியை வாள்களினால் தாக்கியுள்ளனர்.
ஏனைய மூன்று வியாபாரிகளும் மூடப்படாதிருந்த கடையொன்றுக்குள் நுழைந்து தாக்குதல்களிலிருந்து தப்பித்துள்ளனர். தப்பிச் சென்றவர்களில் ஒருவர் 119 இலக்கத்துக்கு அழைப்பு விடுத்தபோது பொலிஸார் வருகை தந்துள்ளனர். இதனையடுத்து குறித்த குழுவினர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.