நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரலவின் பணிப்புரைக்கமைய சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவு என்பன கலைக்கப்பட்டாலும் அவர்கள் நேற்றைய தினமும் வழமை போன்று கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (27) மாலை வரையில் எந்தவொரு அதிகாரியும் சிறைச்சாலையில் மாற்றுக் கடமைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்க வில்லையெனவும் சிறைச்சாலையிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைச்சாலைகள் அமைச்சர் கடந்த 26 ஆம் திகதி மாலை விடுத்த திடீர் அறிவிப்பின் படி சிறைச்சாலைகளில் பணிபுரியும் புலனாய்வுப் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.