கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று (28) இரவு 9.00 மணி முதல் மறு நாள் காலை 6.00 மணி வரை 9 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, இரத்மலான, களுபோவில, நெதிமால உட்பட நுகேகொட ஆகிய பிரதேசங்களிலும், ராஜகிரிய ரோயல் பார்க், லேக் கார்டன், பண்டாரநாயக்கபுர, பெலவத்த மற்றும் முல்லேரியாவ ஆகிய பிரதேசங்களிலும் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என சபை கூறியுள்ளது.