தலைமன்னாருக்கு பயணித்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து தலைமன்னார் வரை பயணித்த ரயில் மீதே, நேற்று மாலை கற்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் கரிசல் மற்றும் ஓலைத்தொடுவாய் பகுதிகளுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ரயில் சாரதிகளில் ஒருவருக்கு காயமேற்பட்டுள்ளது.

மேலும், ரயிலின் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here