வறட்சி காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களில் சுமார் 2 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மாகாணம் உள்ளிட்ட சில மகாணங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

ஏதேனும் ஒரு பகுதியில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுமாயின் அது குறித்து அறிவிக்குமாறு இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இடர்முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி, தமது பிரச்சினை குறித்து அறியத்தர முடியும் என இடர்முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here