கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணகளுக்கான நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் குவைத் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் சுங்க அதிகாரிகளை தாக்கிய சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக
பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தமது செல்லப் பிராணியான நாய் குட்டி ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து குவைத் நாட்டு தம்பதியினர் சுங்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது 5 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இலங்கையின் விலங்கு கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைக்கு இணங்க தம்பதியினர் நாட்டிற்கு வருகை தரவில்லை என சுங்கம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய தம்பதியினர் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here