குவைட் நாட்டைச் சேர்ந்த இருவரினால் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுங்க அதிகாரிகள் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குவைட்டிலிருந்து இலங்கை வந்த தம்பதிகள் எடுத்துவந்த நாய் ஒன்றை விமான நிலையத்திலுள்ள சுங்க அதிகாரிகள் விடுவிக்க தாமதமாகியுள்ளது. இதன்போது, ஆத்திரமடைந்த குவைட் நாட்டைச் சேர்ந்த இருவரும் நாயை பலவந்தமாக விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (27) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
இதனைத் தடுக்க சுங்க அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இதன்போதே, குறித்த குவைட் நாட்டு பெண் சுங்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் குவைட் தம்பதிகள் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எடுத்து வந்த நாயும் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது