அரசாங்கம் ஒழுங்கான முறையில் பொருளாதாரத்தை முகாமை செய்யுமாக இருந்தால், கடன் அடைப்பதற்கு ஹம்பாந்தோட்ட துறைமுகத்தையும், மத்தளை விமான நிலையத்தையும் வெளிநாட்டுக்கு  விற்பனை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் சொல்லும் நியாயம் பொருத்தமற்றதாகும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை முற்றும் தவறானதாகும்.

கடந்த எமது அரசாங்கம் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கும் கடன் பெற்றது. அங்கும் குடிநீர், மின்சாரம், வீட்டு வசதி போன்றவற்றை மேற்கொள்ள கடன் நிதி பயன்படுத்தப்பட்டது.

இந்த அரசாங்கம் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திக்காக கடன் பெற்றது என்பதை மறைத்து தெற்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு கடன் பெற்றதை மட்டுமே பெரிதுபடுத்திப் பேசுகின்றது எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here