சிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று (27) வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

சிலாபம் – கொழும்பு பேருந்தின் ஓட்டுனர் ஒருவருக்கு கொழும்பில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சமபவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமிந்த ஹங்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (26) இரவு 11 மணியளவில் கொழும்பில் வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் முகாமையாளர் மற்றும் ஓட்டுனர் ஒருவர் உட்பட தன்னை தாக்குவதற்காக வந்ததாகவும் தாக்குதலுக்கு இலக்கான ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

தாக்கதலுக்கு உள்ளான ஓட்டுனர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மருதானை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் உடனடியாக தீர்வு ஒன்றை வழங்காவிடின் சிலாபத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து பேருந்துகளும் போராட்டத்தில் ஈடுபடும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here