சட்டவிரோதமான முறையில் 1,53,00000 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் இந்தியப் பிரஜைகள் நால்வர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

235 கிராம் தங்கம் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரதிப் பணிப்பாளர் விபுல மினுவங்கொட தெரிவித்துள்ளார்.

உடலில் மிக சூட்சுமமான முறையில் மறைத்துவைத்து தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டுசெல்ல இவர்கள் முயற்சித்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here