நாட்டினை ஒரு புதிய பாதையில் கொண்டுசெல்லும் நோக்கில் புதிய அரசியல் யாப்பானது, இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பெல்ஜியம் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுக் குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் யாப்பானது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்லவென இரா. சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டினை முன்னேற்றமான பாதையில் இட்டுச்செல்ல வேண்டுமாயின் ஒரு புதிய அரசியல் யாப்பினை நிறைவேற்றுவது இன்றியமையாததாகும் என பெல்ஜியம் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுக் குழுவினருக்கு இடையிலான சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here