ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலைச்சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் திஸ்ஸ சுகதபால மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ பிரதான நீதவான் மொஹம்மட் மீஹாய்ம் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்களுக்கு தலா 50,000 ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களின் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்களே பிணை வழங்க வேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், சந்தேகநபர்களின் வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களையும் நீதிமன்ற பொறுப்பின் கீழ் கொண்டுவருவதாகவும் பிரதான நீதவான் உத்தரவிட்டார்.