வடமராச்சி நெல்லியடி பகுதியில் உள்ள வட மாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தனின் தாயாரின் வீட்டில் நேற்றிரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகம்களை மூடி கையில் கத்தி மற்றும் தடிகளுடன் வந்த சிலர் தம்மை அச்சுறுத்தி நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக வீட்டில் இருந்தவர்கள் குறிப்பிட்டனர்.

இதன் போது வீட்டில் மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தனின் தயாரும், தந்தையும், அம்மம்மாவும் இருந்துள்ளனர்.

கட் – சுகிர்தனின் தந்தை
( என்னை அச்சுறுத்தி ஒரு அறையில் இட்டனர். பின்னர் தடிகளால் என்னை தாக்கினர். பின்னர் மனைவியின் கழுத்தில் இருந்த சங்கிலி, வீட்டில் இருந்த இரண்டு சோடி காப்பு, மற்றும் நெல் மூடையில் மறைத்து வைத்திருந்த தாலிக் கொடி என்பதவற்றை திருடிச் சென்றனர். மொத்தமாக 15 பவுன் தங்கத்தை திருடிச் சென்றனர். 50 ,55 ஆயிரம் ரூபா காசையும் எடுத்துச் சென்றனர்.)

இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவினோம்.

குறித்த வீட்டில் இருந்து திருடர்கள் 40 ஆயிரம் ரூபா காசை திருடிச் சென்றுள்ளதாகவும், எத்தனை பவுன் தங்கம் திருடப்பட்டுள்ளது என்பது இன்னும் மதிப்பிடப்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here