துருக்கி அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சியை முறியடித்த இரண்டு வருட நிறைவை நினைவுபடுத்தும் நிகழ்வு இலங்கைக்கான துருக்கி தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜ தந்திரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி இந்த இராணுவ சதி முயற்சி முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சதிப் புரட்சியின் சூத்திரதாரி பெடோ அமைப்பின் பெதுல்லா குலான் என்பதற்கு பல்வேறு சாட்சிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது இந்த உண்மை தெரியவந்துள்ளதாகவும் இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்சுஹதார் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்ச்சிகார நடவடிக்கையினால் 251 பேர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் காயமடைந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.