இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள  சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்வரும்  செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்குமிடையில் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் பின்னர் சிங்கப்பூர் பிரஜைகளின் அத்துமீறிய தலையீடுகள் இலங்கைக்குள் இருக்கும் என எதிர்க் கட்சியினரால் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தேசிய வர்த்தக கொள்கைத் திட்டத்துக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டதா? என்ற கேள்வி தொடர்ந்தும் எதிர்த் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here