
மக்கள் தங்களுக்கு அதிகாரத்தை வழங்குமாக இருந்தால், எதிர்வரும் ஐந்து வருட காலத்துக்குள் சட்டத்தை மதிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிக் காட்டுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
இன்று மக்களுக்கு தூக்குத் தண்டனையல்ல பிரச்சினை. பொது மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை திசை திருப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் நாடகமே இந்த தூக்குத் தண்டனை நடவடிக்கை.
நாம் எமக்கு அதிகாரம் கிடைத்தால் தூக்கு மேடை அமைக்க மாட்டோம். பாடசாலை, விகாரை, கோவில், பள்ளிவாயல் என்பன அமைப்போம். இந்த சமூக அமைப்பின் ஊடாக சட்டத்தை மதிக்கும் மக்களை உருவாக்குவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.