அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினரின் மின்னஞ்சல்களை ஊடுருவியதாக 12 ரஷ்ய உளவுப் பிரிவினர் மீது அமெரிக்க சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சிப் பிரமுகர்களின் மின்னஞ்சல்களை திறப்பதற்காக, அவர்களுக்கு கடவுச்சொல் திருடும் பிஷ்ஷிங் மின்னஞ்சல்களை ரஷ்ய உளவுத்துறையினர் அனுப்பியதாகவும் வைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

2016 ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு வரும்நிலையில்,ஏற்கனவே 20 நபர்கள் மீதும், மூன்று நிறுவனங்களின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here