திருத்தப் பணிகள் காரணமாக வத்தளையின் சில பகுதிகளில் நாளை (15) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பேலியகொட, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா -எல மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 8 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here