காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான சந்திப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

காணாமற்போனோர் அலுவலக பிரதிநிதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை 9.30-க்கு ஆரம்பமாகவிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையால் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தாமதமாகின.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களில் ஒரு பகுதியினர் மண்டபத்திற்குள் சென்ற நிலையில், மற்றுமொரு பகுதியினர் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அலுவலகத்தின் பிரதிநிதிகள், மண்டபத்திலிருந்து வௌியில் வந்து எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.

எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட அனைவரும் மண்டபத்திற்குள் சென்றதையடுத்து இன்றைய நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆணைக்குழு தயாரானது.

எனினும், மண்டபத்திற்குள் சென்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மீண்டும் எதிர்ப்பு வௌியிட்டனர்.

இதனால், சுமார் ஒரு மணித்தியாலம் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தடைப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

எதிர்ப்புத் தெரிவித்த தரப்பினர் மண்டபத்திலிருந்து வௌியேறிய நிலையில், எஞ்சியிருந்தவர்களுடன் ஆணைக்குழு கலந்துரையாடியது.

ஆணைக்குழு நடவடிக்கைகள் நிறைவடையும் வரை மண்டபத்திற்கு வௌியில் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கலந்துரையாடலின் முடிவில் யாழ். மாவட்ட சிவில் அமைப்புகளுடனும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

இதனையடுத்து, ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் தௌிவூட்டும் ஊடக சந்திப்பு நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here