மீற்றர் மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை பொலிஸார் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா, திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர், வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் முச்சக்கரவண்டிகளில் மீற்றர் மானி பொருத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும் மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மீற்றர் மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here