17 நாட்கள் , பல வீரர்களின் உன்னத அரப்பணிப்பு.!சர்வதேசத்தின் மனிதாபிமானம்.! தொழில்நுட்பத்தின் பிரமாண்ட வளர்ச்சி.! என எல்லாம் சேர்ந்து 12 சிறுவர்கள் வெற்றிகரமாக காப்பற்றப்பட்டுள்ளார்கள்.!
இயற்கையினை வெல்வது சாத்தியமற்றது .!
இயற்கையினை மாற்றி அமைப்பதும் சாத்தியமற்றது.!
ஆனால் இயற்கையுடன் போராடலாம்.!இந்த சந்தர்ப்பத்தில் ,ஈழத்தில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள்,குழந்தைகள்,பெண்கள் , நோயாளிகள், இதே சர்வதேசம் பார்த்திருக்க படு கொலை செய்யப்பட்டனர்.!அங்கு இயற்கையுடன் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருக்கவில்லை.!
யுத்தத்தை நிறுத்துங்கள் என்னும் ஒரு சொல் போதுமானதாக இருந்தது.!
ஈராக்கில்,சிரியாவில், ஆப்கானிஸ்தானில் என இதே சர்வதேச மனிதாபிமான அரசுகளால் எண்ணற்ற சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் மறக்கமுடியாதவை.!
அப்போது சர்வதேசமும், அதன் ஊடகங்களும் ஏன் பதைபதைக்கவில்லை?
உலகின் நியதி வலியவனின் கையில்.!
வலியவன் தீர்மானிப்பதுதான் இங்கு வாழ்வு.!
இதுதான் பூகோள அரசியலின் சூட்சுமம்.!
குகையில், நீரில் , பெரும் ஆபத்தில் சிக்கினால் ஓடோடி வரும் சர்வதேச மனிதம், வலிந்த யுத்தங்களில் சிக்கி பெரும்குரலில் அலறியபடி மரணிக்கும் எளிய மனிதர்களை கண்டுகொள்வதேயில்லை.!