யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இன்று (3) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய திருகோணமலை கந்தளாய் பகுதியை சேர்ந்த என். நசீர்(வயது-25) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மல்லாகம் சந்திக்கருகில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் வாயிற்கடமையில் இருந்த நிலையில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி வெடித்தமைக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இருந்து அண்மையில் வெளியேறி பொலிஸ் சேவையில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here