இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் LTTE தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என பிரதமர் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை அடுத்து சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால் மட்டுமே இந்நாட்டில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும். இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும்” இதுவே எமது பிரதான நோக்கம் என நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.