தெல்தெனிய இளைஞர்களுக்குப் போன்றே விஜயகலாவுக்கும் இந்நாட்டு சட்டம் பொருந்தும் எனவும், இந்த நாட்டின் அதிகாரிகள் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தை வைத்து விஜயகலாவை என்ன செய்யப் போகின்றார்கள் என்பதைப் பார்ப்போம் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார்.

ஒரு நாட்டுக்குள் ஒரு சட்டமே இருக்க வேண்டும். அது வடக்குக்கும் தெற்குக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். வடக்கினதும், கிழக்கினதும் வாக்குகளை இலக்குவைத்து இனவாதக் கருத்துக்களை முன்வைத்து வரும் விஜயகலா போன்றவர்களுக்கு என்ன தண்டனை என்பதை நாம் அவதானித்துக் கொண்டே இருக்கின்றோம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுபல சேனாவின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (03) கோட்டே ஸ்ரீ கல்யாணி தர்ம மகா சபையின் மகாநாயக்கரை சந்தித்து கலந்துரையாடினர். இதன் பின்னர் அமைச்சர் விஜயகலாவின் நேற்றைய உரைக்கு தேரர் எதிர்ப்பைத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here