யூரோ போவினால் தடை செய்யப்பட்ட வாகனங்கள் உட்பட பாதுகாப்பற்ற வாகனங்களுக்கான இறக்குமதி இன்று முதல் தடை செய்யப்படுகிறது.இதன்படி காற்று பலூன்கள், இருக்கை பட்டி மற்றும் புகை கக்கும் தன்மை போன்றவற்றில் பாதுகாப்பற்ற வாகனங்கள் எல்லாவற்றினதும் இறக்குமதிகள் தடைசெய்யப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 2018 ஜனவரி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட இருந்தபோதும் துறைசார்ந்தோரின் கோரிக்கை காரணமாக அது இன்று வரை பிற்போடப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதன்படி காற்று பலூன்கள், சாரதிக்கான த்ரீ பொன்ட் இருக்கை பட்டிகள், பயணிகளுக்கான இருக்கை பட்டிகள் மற்றும் ஏபிஎஸ் தடையாளி என்பவற்றை கொண்டிருக்காத வாகனங்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்படுகிறது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here