அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து நிலையை அடைந்துள்ள விமல் வீரவங்சவுடன் நேற்று மேற்கொண்ட சந்திப்பின் மூலம் இது மேலும் உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
16 பேர் கொண்ட குழு நேற்று விமல் வீரவங்சவின் கட்சியுடன் நடாத்திய சந்திப்பு குறித்து வினவிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.