இலங்கையில் பேருந்து மற்றும் புகையிரதங்களில் பயணம் செய்யும் அனைத்து பெண்களுமே பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் பொதுப்போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் 100 வீதமான பெண்கள் இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
74 வீதமான பெண்களின் உடல் பாகங்கள் தேவையற்ற வகையில் ஸ்பரிசிக்கப்படுவதாலும், 52 வீதமான பெண்களிடம் ஆண்களின் தேவையற்ற நடத்தைகளினாலும், 46 வீதமான பெண்களின் உடல் பாகங்களை ஆண்கள் பார்ப்பதனாலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் ரீதியான தொல்லைகளை எதிர்நோக்கிய பெண்களில் 37 வீதமான பெண்கள் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும், 29 வீதமான பெண்கள் தங்களது கல்வியைத் தொடர முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு இலக்காகும் பெண்கள் 119 அவசர பொலிஸ் அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.