பலாங்கொடை நகரில் அமைந்துள்ள தங்க நகை கடை ஒன்றில் நுழைந்த இருவர் அங்கிருந்த தங்க மாலைகளுடன் கூடிய பெட்டியினை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் திருடப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி சுமார் 3 லட்சத்திற்கும் அதிகம் என நகை கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றவர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் தொரவெல பகுதியில் வைத்து மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் பலாங்கொடை வேவல்வத்தை பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி தப்பிச் சென்ற மற்றைய சந்தேக நபரை தேடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த கொள்ளை சம்பவம் நகை கடைக்கு அருகில் பொருத்தப்படிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.