காலசென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸூக்கு கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற கம்பெரலிய திரைப்படத்திற்கு கிடைத்த தங்க மயில் விருது இன்று காலை காணாமல் போயுள்ளது.
அன்னாரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். காலை 10 மணிக்கு நடைபெற்ற சமய கிரியைகளின் போது விருது அருகில் இருந்துள்ளது. இடைநடுவில் எவரோ அதனை திருடிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ய உள்ளனர். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் வீடு பம்பலப்பிட்டி டிக்மன் வீதியில் அமைந்துள்ளது.