பதவிகளுக்கு அதிகாரத்தை கூட்டுவதனால் எந்தவித நன்மையும் கிடையாது எனவும், தமது இறுதித் தீர்வு மக்களின் வாக்கிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
கட்சியின் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர். இருப்பினும், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பதவியிலேயே திருப்திகான முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.