இலங்கையில் முதல் முறையாக 3D கமரா பயன்படுத்தப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தைரொய்ட் கட்டி ஒன்றை நீக்கும் சத்திரசிகிச்சை ஒன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட வைத்தியர் ரிஸ்னி சகாப் உட்பட வைத்திய குழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான பெண் ஒருவருக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாயில் கமரா ஒன்றை நுழைத்து, ஒரு வெட்டும் போடாமல் இந்த சத்திரசிகிச்சை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3D கமரா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான தொழில்நுட்பத்தின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சத்திரசிகிச்சை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.