கடந்த மூன்று மாத காலப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 75 பயணப் பொதிகள் காணாமல் போயுள்ளன.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் பயணிகளின் பயணப் பொதிகள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் 75 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 25ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணாமல் போன பயணப் பொதி ஒன்றை சீ.சீ.ரீ.வி கமரா மூலம், பொதியை எடுத்துச் சென்றவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ இவ்வாறு பயணப் பொதிகள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயணப் பொதிகளை களவாக எடுத்துச் சென்றமை குறித்து சிலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here