எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு இம்மாதம் 29, 30ம் திகதிகளில் மதுபானச் சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
வருடாந்தம் வெசாக் தினத்தை முன்னிட்டு மதுபானச் சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவை அரசாங்கம் பிறப்பித்து வருவது வழக்கமாகும்.
அந்த வகையில் இவ்வருடமும் ஏப்ரல் 29,30ம் திகதிகளில் இறைச்சிக் கடைகளும், மதுபானச் சாலைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் சூப்பர் மார்க்கட்டுகளிலும் இவற்றை விற்பனை செய்வதை தவிர்ந்துகொள்ளுமாறும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக குறித்த தினங்களில் நைட் கிளப்புகள் மற்றும் சூதாட்ட விடுதிகளை மூடி வைத்து வெசாக் கொண்டாட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.