தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாவதாக புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது.

“அமைதியான மனம், ஆரோக்கியம் தரும்” என்ற தொனிப் பொருளில் வெசாக் வார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக வேண்டி, நாடெங்கிலும் பௌத்த வணக்கஸ்தலங்கள், அறநெறிப் பாடசாலைகள், பொது அமைப்புக்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு தியான, தான, தர்ம நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாகவும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வெசாக் வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருந்த சர்வதேச தொழிலாளர்கள் தின நிகழ்வுகள் மற்றும் விடுமுறை என்பன மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here