ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான உறுப்பினர்களை கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது.

இதன்படி, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹசீமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் , தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாசவும், ரவி கருணாநாயக்க உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் பொருளாளராக ஹர்ச டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். உதவிப் செயலாளராக இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன பெயரிடப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை நேற்று மாலை பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் கூடிய போதே , இந்த பதவிகளுக்கான பெயர்களை அறிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here