அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ ல.சு.கட்சியைச் சேர்ந்த 16 பேருக்கும் எதிர்க் கட்சியில் அமர்வதற்கு கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(25) நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்து அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்று (25) இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், இரவு 10.30 மணிவரையில் நடைபெற்றுள்ளது.

மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் ஸ்ரீ ல.சு.கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டமும் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here