ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப, பிரதான பதவிகளுக்குரியவர்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு இன்றும் (25) அக்கட்சியின் அரசியலமைப்பு சபை கூடவுள்ளது.

இன்று மாலை 5.00 மணிக்கு மீண்டும் கூடுவதற்கு அச்சபை தீர்மானித்துள்ளது. நேற்று கூடிய ஐ.தே.க.யின் அரசியலமைப்பு சபையினால் இறுதித் தீர்மானங்களுக்கு வரமுடியாமல் போனமையையிட்டு இன்றும் கூடவுள்ளதாக அச்சபையின் உறுப்பினர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கட்சி பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை கட்சித் தலைவருக்கு சபை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இன்று கட்சியின் ஏனைய பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இந்த தீர்மானங்கள் நாளை (26) நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here