அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் சுபநேரத்தில் எதிர்க் கட்சி ஆசனத்தில் அமரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருந்து கொண்டு எதிர்க் கட்சியில் அமரவுள்ளமை முக்கிய அம்சமாகும். அரசாங்கத்திலுள்ள அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தாலும் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியில் இணையப் போவதில்லையென முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here