இலங்கை ஜனாதிபதியை எதிர்த்து லண்டனில் கவயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது. இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் பூரண ஆதரவுடன் பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் பொதுநலவாய மாநாடு நடைபெற்ற மண்டபத்திற்கு எதிராக ஒன்று திரண்டு கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டார்கள். தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு போன்ற பல பிரச்சனைகள் தொடர்பாக இன்னும் தீர்வு காணப்படவில்லை. தற்போதும் கட்டமைப்பிலான இனவழிப்பினை இலங்கை பேரினவாத அரசு செய்து வருகின்றது போன்ற பல குற்றச்சாட்டுக்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் கோஷங்களாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here