தனியார் வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவுறுத்தலொன்றை கல்வியமைச்சர் விடுத்துள்ளார். அதாவது, தனியார் வகுப்புக்கு வருமாறு தெரிவித்து மாணவர்களை அச்சுறுத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இலக்கு வைத்து குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக அனேக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.