ஜுலை. 1983 கலவரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இனவழிப்பை தொடர்ந்து அன்று வரை வட கிழக்கைப் பிரதிபலிக்கின்ற தமிழ் பேசும் மக்களின் கலை, கலாச்சாரம் நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் சிதைக்கப்படும் நடவடிக்கைகளை இவ் அரசு கச்சிதமாக மேற்க்கொண்டுவருகிறது. அதனடிப்படையில் பார்க்கின்றபோது வடக்கிலும், கிழக்கிலும் புதுவருட கொண்டாட்டங்கள் சிங்கள கலை கலாச்சாரத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களது கலை கலாச்சாரத்திற்கு முரணான கலை கலாச்சாரங்களை உட்புகுத்தி சிறுவர்களுக்கான போட்டியை வைத்து தமிழ் கலாச்சாரத்திற்குள் சிங்கள கலாச்சாரத்தை திணிக்கும் நடவடிக்கைகளில் இவ்வரசாங்கம் ஈடுப்பட்டு வருகிறது.

வட-கிழக்கில் இருக்ககூடிய இராணுவ வீரர்களினால் தமிழ்ப்பெண்கள் திருமணம் செய்துக்கொள்ளப்பட்டு தமது இனப்பரம்பலை தமிழர் வாழ் பிரதேசங்களில் உருவாக்கி தமிழரின் இருப்பை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்க்கொண்டு வருகின்றது. இதன் மூலம் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றது. இந்த விடயங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அறிந்தும் தமது செயற்பாடுகளில் ஏனோ தானோ எனவும். தமது கதிரைகளை பலப்படுத்தும் நோக்கில் மாத்திரம் செயற்படுகிறார்களே தவிர வேறு எந்த செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுப்படவில்லை.

தமிழின அழிப்பு இடம்பெற்று 6வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வட-கிழக்கு இணைப்பு உட்பட தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டங்களை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது. கடந்த காலங்களில் போரை முன்னெடுத்து வந்த இலங்கையரசு தற்போது போரற்ற சூழ்நிலையில் ஒரு இன சுத்திக்கரிப்பு வேலையை கலை,கலாச்சாரம் என்ற போர்வையில் திணித்து கட்சிதமாக முன்னெடுத்து வருகிறது.

பொருளாதார ரீதியில் தமிழினத்தை பின்னடைய செய்ய வேண்டும் என்ற ரீதியிலும் குறிப்பாக இருக்ககூடிய தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்கள் வியாபார நிலையங்களை அமைத்து. அங்கு அவர்களை குடியமர்த்தும் வேலைத்திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனைத் தவிர கட்டாய மதத்திணிப்பும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றது. இனவழிப்பு என்ற வரையறைக்குள் கட்டாய மதமாற்றம், கட்டாயக்கருகலைப்பு, ஒரு இனமாகவோ குழுவாகவோ அழித்தல், விசவாயு பயன்பாடு போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கலை, கலாச்சாரத்தை மாற்றுவதன் ஊடாக ஒரு இனத்தை அழிக்கும் ரீதியிலே இந்த கூட்டரசாங்கம் தற்போது ஈடுபடுகிறது.

இதனை தமிழ்பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் கண்டிப்பதோடு இதற்கான துரிதநடவடிக்கையினையும் மேற்க்கொள்ள வேண்டும். இல்லையேல் சிங்கள அரச தலைமைகள் , இனவாதகருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள் கூறுவதைப்போல இது பௌத்த நாடாக மாற்றப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here