பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொள்ள லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிங்ஸ்பெரியில் உள்ள ஸ்ரீ சத்தாதிஸ்ஸ பௌத்த மத்திய நிலைய விகாரைக்கு நேற்று விஜயம் செய்துள்ளார்.
பௌத்த மத்திய நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி, விகாராதிபதி அக்கமஹா பண்டித கலயாயே பியதிஸ்ஸ தேரரை சந்தித்துள்ளார். இதன் பின்னர் விகாரையில் நடைபெற்ற வழிபாடுகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டுள்ளார்.