நாட்டின் பல பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள மழையுடன் கூடிய காலநிலை இன்று (19) முதல் குறைவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் மழை குறைவாக காணப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து மீண்டும் மழை பெய்யும் சாத்தியப்பாடு காணப்படுகின்றது எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எது எப்படிப் போனாலும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை மாவட்டங்களுக்கும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக காற்றும் வீசக் கூடும் எனவும் இடி, மின்னலினால் ஏற்படும் தீங்குகளிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.